காளமேகம்..கவியின் சிறப்பான பாடல்கள்

காளமேகம் …இயற்றிய இந்த தனிப் பாடலின் உள்ளுறைப் பொருளை உணர்ந்தால் உள்ளம் களிப்படைவது நிச்சயம்.

“தீத்தான் உன் கண்ணிலே ; தீத்தான் உன் கையிலே ;தீத்தானும் உந்தன் சிரிப்பிலே – தீத்தானுன்மெய்யெலாம்; புள்ளிருக்கும் வேளூரா ! உன்னையித்தையலாள் எப்படிச் சேர்ந்தாள் ?

பொருள்.

——————-
நோய்களைத் தீர்க்கும் மிருத்திகையை
(மண்ணை) மருந்தாகத் தருபவர் வைத்தியநாத
ஸ்வாமி. வைத்தீஸ்வரன் கோயில் என்னும்
புள்ளிருக்கும் வேளூரில் உள்ள இந்தக்
கோயிலின் “சித்தாமிர்த தீர்த்தம்” மிகச் சிறப்பு
வாய்ந்தது.இந்தத் தலத்துக்கு வந்து சேர்ந்தான்
நையாண்டிக்குப் பெயர்போன காளமேகம்.
இங்கே எழுந்தருளியுள்ள பெருமானைப்
பார்த்ததும், அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது.
என்ன கேள்வி தெரியுமா ?“கண்ணிலே நெருப்பு (நெற்றிக்கண்);
கையிலே நெருப்பு (தாருகாவன முனிவர்கள்
ஏவியது) ;
சிரிப்பிலே நெருப்பு (திரிபுர சம்ஹாரத்தின்போது
வெளிப்பட்டது) ;
உடலும் நெருப்பு (அடிமுடி காணமுடியாத
அனல் பிழம்பாய், அண்ணாமலையில்
வெளிப்பட்டது).இப்படி நெருப்பு மயமாய் இருக்கும் உன்னோடு,
இந்தப் பெண் (தையலாள்) எப்படிச் சேர்ந்தாள் ?”
– இதுதான் காளமேகத்தின் கேள்வி.
“தையல்” என்பதற்கு பெண் என்றும் பொருள்.
அதே சமயம், வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள அம்பிகையின் பெயரும் தையல்நாயகிதான் !
##

Leave a Reply

%d bloggers like this: