இளைய தலைமுறையினருக்கு நாம் நல்ல வழிகாட்டியாய் இருக்க வேண்டும்.

குழந்தைகள் அடுத்த தலைமுறையினர்: நமது வித்துக்கள். அந்த வித்துக்களைச் சரியானபடி விதைக்கிற கடமை நமக்கு நிறையவே உண்டு எனும் பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்.பகவான் ஸ்ரீகிருஷ்ணர், எல்லாத் தருணத்திலும் அப்படியொரு பொறுப்புடன் செயல்பட்டார். ஸ்ரீகிருஷ்ணர் என்பவர் சாதாரணர் அல்லர்; பரம்பொருள். ஆனாலும், எத்தனை விஷயங்களில் தன்னைத் தாழ்த்திக்கொண்டிருக்கிறார்? அர்ஜுனனுக்குச் சாரதியாக இருந்தார். அதுவும் எப்படி? அவன் தேரில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் தோள் கொடுத்தார். ஸ்ரீகிருஷ்ணரின் தோளில் கால் வைத்துத்தான் அர்ஜுனன் தேரில் ஏறினான்; இறங்கினான். இதைவிட ஒருவர் தன்னைத் தாழ்த்திக்கொள்ள முடியுமா என்ன?

அர்ஜுனனுக்கு மரியாதை வழங்கினார் ஸ்ரீகிருஷ்ணர். கம்சனின் சிறையில் இருந்த உக்கிரசேனனுக்கு விடுதலை தேடித் தந்து, மீண்டும் அவனை ராஜபரிபாலனம் செய்யச் சொல்லி, கௌரவப்படுத்தினார். தருமபுத்திரருக்கு ராஜ்ஜியத்தைப் பெற்றுத் தந்தார். இவை அனைத்துக்கும் கண்ண பரமாத்மாதானே காரணம்! அதனால்தான் அவருக்கு ‘மானதஹ’ எனும் திருநாமம் சொல்லிப் பூரிக்கின்றனர் ஆன்றோர். அதாவது, மானம் கொடுத்தவன்; மரியாதையை வழங்கியவன் என்று அர்த்தம். இப்படி எத்தனை எத்தனை வெகுமானங்களை, எவ்வளவு பேருக்கு வாரி வழங்கியிருக்கிறார் வள்ளல் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா

##

ஸ்ரீ.வேளுக்குடி க்ருஷ்ணன்.

Leave a Reply

%d bloggers like this: