காளமேகப் புலவர் வாழ்க்கை யில் ஏற்பட்ட திருப்புமுனை

”ஞானிகளுக்கும் துறவிகளுக்கும் அமையும் வாழ்வியல் தடையானது அவர்களின் வாழ்வில் அமையும் திருப்பு முனையாக அமைந்து, ஒரு மாற்றுப் பாதையில் செல்லுமாறு திருவருளே செயற்படுத்துகிறது.

காளமேகப் புலவர் நாகப்பட்டினத்துக்குச் சென்ற நேரம் ஒரு நண்பகல். நல்ல பசி அவரை வாட்டியது. அவர் ஒரு மகாகவி என அறிந்தவர் யாரும் அங்கு இல்லை. அவர் நடந்து செல்லும் வழியில் ஒரு பள்ளிக்கூடம். உணவு இடை வேளை. பள்ளிப் பிள்ளைகள் இங்கும் அங்கும் தெருவில் ஓடி விளையாடிக் கொண்டிருந் தார்கள்.
காளமேகப் புலவர் அங்கே கோலி விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கூப்பிட்டு, “தம்பி! சோறு எங்கே விக்கும்?” என்று கேட்டார். (உண்ணும் சோற்றை விலைக்கு விற்பதும், காசு கொடுத்து வாங்கிச் சாப்பிடுவதும் ஆகிய வறுமை நோய் பீடித்திருந்த காலமே காளமேகப் புலவர் காலம் என்று தெரிகிறது. வரலாற்று ஆசிரியர் இதை அடிப்படை ஆதாரமாக வைத்துக் காளமேகப் புலவர் காலத்தை ஆராய்தல் கூடாது.)
இந்த வினாவைக் கேட்ட சிறு பையன் சிரித்தான். ஓர் ஆன்மா ஏதேனும் ஓர் உடம்புடன் கூடிப் பிறப்பு எடுத்து இந்த உலகில் வாழத் தொடங்குமானால், அதற்குத் தடைபடாத இரண்டு அனுபவங்கள் உண்டு. சாப்பாடும் தூக்கமும். எறும்புக்கு வாழ்நாள் முழுவதும் தூக்கமே கிடையாது.

சிறுவன் சிரிக்கச் சிரிக்க காளமேகப் புலவருக்குக் கோபம் அதிகமாயிற்று. “ஏன் சிரிக்கிறாய்?” என்று அதட்டிக் கேட்டார் காளமேகம். சிறுவன் “ஓதி போல் வளர்ந்திருக் கிறாயே! இது கூடத் தெரியவில்லையா? சோறு தொண்டையிலே விக்கும்” என்றானே, பார்க்கலாம்.
காளமேகப் புலவர் “சோறு எங்கே விற்கும்?” என்று கேட்காமல், உலக வழக்குப் படி, “சோறு எங்கே விக்கும்?” என்று கேட்டு விட்டார்.

சிறுவன் சொன்னது சரிதானே என்று போயிருக்க வேண்டும் காளமேகப் புலவர். என்ன இருந்தாலும் பெரும் புலவர் அல்லவா! கோபம் தணியவில்லை. சிறுபிள்ளை தானே, என்ற இரக்கமும் இல்லை.
உடனே அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்தார். கீழே ஒரு கரிக்குச்சி கிடந்தது. எடுத்து, பள்ளிக் கூடத்துச் சுவரில் எழுத ஆரம்பித்தார். (சுவரில் பிறரைப் பற்றிய வசவுகளை முதன் முதல் எழுதத் தொடங்கியவர் காளமேகப் புலவர்தான் போலும்!)

“பாக்குத் தெறித்து விளையாடும் பாலகற்கு நாக்கு”
என்பது வரை எழுதினார். அதற்கு மேல் பாட்டு வரவில்லை. பாட்டினை அறம் தடுத்து விட்டது. என்னதான் ஆயிரம் ஆயிரமாகப் பொழிந்து தள்ளும் கவிஞனானாலும் பாடல் இடையில் தடைப்பட்டு நின்றதன் காரணம் தெரியவில்லை. காரணம் தெரியாமைக்காகக் காளமேகம் வருந்தவில்லை. நமக்கும் எடுத்த பாட்டானது தடைப்பட்டு நிற்குமா? என்பதில் தான் மனவருத்தம். பசியினால் ஒருவேளை தடைப்பட்டிருக்கலாம்! சாப்பிட்டு வந்து அந்த வரியை நிறைவு செய்யலாம் என்று எண்ணிக் கொண்டு, சாப்பாட்டுக் கடையை நோக்கி, நடையைக் கட்டினார் மகாகவி காளமேகம்.
சாப்பிட முற்பட்டாரே தவிர சாப் பாடு இறங்கவில்லை. “நாக்கு தெறித்து விழ நாகேசா” என்று அந்த வரியை நிறைவு செய்ய வேண்டும் என நினைத் துக் கொண்டு, தான் முன்னே கவிதை எழுதிய பள்ளிக்கூடத்துச் சுவரின் பக்கம் வந்தார். பாட்டின் அந்த வரி நிறைவு செய்யப் பெற்றிருந்தது.

“நாக்குத் தமிழ் செழிக்க நாகேசா” என்று நிறைவு செய்யப் பெற்றிருந் தது. தெறித்து விழ வேண்டும் என்று எண்ணிய காளமேகக் கவிஞனின் நாக்கில் முன்னே தடுத்த அறம் இப்போது தமிழ் செழிக்கும் வளமை வாய்ந்த நாக்காக மாற்றியது. பின்னர் அவர் அருள் நிறைந்த பாடல்களைப் பாடி அருள் நலம் பெற்றார் என்பது வரலாறு.

காளமேகப் புலவர் வாழ்க்கை யில் ஏற்பட்ட தடையைத் திருவரு ளால் நேர்ந்த தடை எனக் கருதுவ தோடு, அந்த ஒருவகைத் தடை, திருவருள் நேர்நின்று நிகழ்த்திய வாழ்வியல் திருப்புமுனை எனவும் கருதுதல் வேண்டும். தனிமனித வாழ்விலும் இத்தகைய திருப்பு முனைகள் அமைதல் உண்டு. அவற்றை அவன் கூர்ந்து கவனிப் பதில்லை. தடை ஏற்பட்டு விட்டது என்று வருந்திக் கொண்டிருப்பா னேயன்றி, தடைக்குப் பின்னர் தம் முடைய வாழ்க்கையில் அமைந்த திருப் பத்தை அவன் எண்ணிப் பார்ப்பதே யில்லை. ஊழ்வினையைப் பற்றியும் பிராரப்தம் பற்றியும் நாள்தோறும் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒருவன் திரு வருள் ஏற்படுத்திக் கொடுக்கும் தடை களும் பின்னர் வரும் வாழ்வியல் திருப்பம் பற்றியும் சிந்திப்பதே யில்லை.”

##படித்ததில் பிடித்தது.

Leave a Reply

%d bloggers like this: