”ஸ்ருணு”=கேட்டியேல்..க்ருஷ்ண பரமாத்மா+ஆண்டாள்

பகவத் கீதையில் க்ருஷ்ண பரமாத்மா அர்ஜுனனை அடிக்கடி,”ஸ்ருணு”…கவனமாய்க் கேள்!என்று கூறிக் கொண்டே அவனது கவனத்தை ஒரு முகப் படுத்தி வந்தாராம்….
இந்த டெக்னிக் ஆண்டாளிடம் கற்றுக் கொண்டதோ என்னமோ!!
கண்ணனின் இல்லம் தேடி,தன் தோழியர்களுடன்,சென்று தங்களை உஜ்ஜீவிக்க வேண்டுகிறாள்,ஆண்டாள்!

அவளது திருமேனி அழகிலும்,தன்பால் கொண்ட பக்தி கலந்த காதலிலும் மயங்கிய கண்ணன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான்.
அவ்வாறு அவன் தன்னைப் பார்ப்பது அவளுக்கு பெருமையாய் இருப்பினும்,சக பெண்கள் நடுவில் அவ்வாறு தன்னை மட்டும் உற்று நோக்குவது அவளுக்கு லஜ்ஜையாக இருக்கிறது!
”இதென்ன,அத்தனை பேர் நடுவில்?!” என்கிற பாணியில்..
”மாலே மணிவண்ணா” என்று ஆரம்பித்தவள்…வேண்டுவன..”கேட்டியேல்”னு பதம் போடுவதுக்கு இத்தனி அர்த்தமாம்!

ஸ்ரீவேளுக்குடி ஸ்வாமிகள்

Leave a Reply

%d bloggers like this: