கம்பனின் சொல் நயம்.

அஞ்சு வணத்தை வரன்முறை யோத வரக்கெறிந்த
பஞ்சு வணத்தை மருவுமென் றாளுமை பாகமொடு
செஞ்சு வணத்தை யனையநின் கோலமென் சிந்தையுற
விஞ்சு வணத்தை மகிழ்குன்றை வாண விரும்புவனே. ..

இப்பாடலில் அஞ்சுவணம் என்ற சொல்..முதல் வரியில் ஐந்து நிறங்கள்,இரண்டாவதில் அஞ்சும் உவணம் அதாவது கருடன்,மூன்றாவதில் அம்சுவர்ணம்..அழகிய பொன் என்றும் கடைசியில் அம்சுவள் நத்தின் எனப் பிரிந்து அழகிய பெரும் சங்கு என்றுபொருள் கொண்டது.

பொருள்..
ஐந்து நிறங்களைக் கொண்ட ஆடை உடுத்தியவள்,பாம்புகள் எல்லாம் நடுங்கும் கருடனின் வேகத்தைக் கொண்டவள்,அழகிய பொன்கொண்டு செய்யப்பட்ட மேலாடையை அணிந்தவள்,கடல் நீரில் தோன்றிய அழகிய சங்கிலுண்டான முத்துக்களாலான ஒளி பொருந்திய மாலையை ஆபரணமாக அணிந்தவள் என்று இலங்காதேவியைக் கம்பன் வர்ணிக்கிறான்.

Leave a Reply

%d bloggers like this: