ஆழ்வார் திருநகரியின் பெருமை.

“திருக்குருகூர் என்றழைக்கப்படும் ஆழ்வார் திருநகரிக்கு அருகில் தாமிரபரணி நதியின் அக்கரையில் ஒருவர் ஒரு நாய் வளர்த்து வந்தார்.
அந்த நாய் தினமும் குருகூருக்கு வந்து அங்குள்ள மறையோர்களின் வீட்டு வாசலில் எறியப்படும் எச்சில் இலைகளில் இருந்த மிச்ச உணவைச் சாப்பிட்டு வந்தது.பிறகு தன் எஜமானரிடம் திரும்பிவிடும்.
ஒரு நாள் குருகூர் சென்ற தன் நாயைக் காணாமல் வருந்திய நாயின் சொந்தக்காரரர் தாமிரபரணி ஆற்றின் கரை நெடுகிலும் தேடினார்.
தன் நாய் நீரில் மூழ்கி இறந்து கொண்டிருந்ததையும் பார்த்தார்.ஆனால் அதன் தலையிலிருந்து ஜோதி மயமாக ஒளி கிளம்பிச் சென்றதைப் பார்த்து ஆச்சர்யப் பட்டார்.
உடனே ஆழ்வாரை நோக்கி”பெருமானே! ஸ்ரீவைஷ்ணவர்களுடைய எச்சிலை உண்ட இந்த நாய்க்குப் பரமபதம் கிடைக்கும்படிச் செய்தாயே.உம்முடைய திருவாய்மொழியை எம்பெருமான் தலைசாய்த்து(தலை குலுக்கி) மகிழ்ச்சியுடன் கேட்கிறான்.
அந்த நாய்போல அடியேனுக்கும் பரமபதம் கிடைக்கும்படிச் செய்யக் கூடாதா?”என்று…பாடல் இங்கு!

“வாய்க்கும் குருகைத் திருவீதி எச்சிலை வாரி உண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்த நாயோடு இந்தப்
பேக்கும் இடம் அளித்தால் பழுதோ பெருமாள் மகுடம்
சாய்க்கும்படிக்குக் கவி சொல்லும் ஞானத் தமிழ்க்கடலே”

Leave a Reply

%d bloggers like this: