யாத்ருச்சிகம்”அல்லது எதேர்ச்சையாக=எதிர்பாராமல்…

சில சம்பவங்கள் கடவுள் சங்கல்பத்தால் எதிர்பார்க்காமல் நடக்கின்றன.

ஸ்ரீமத் ராமயணத்தில் ராமனின் பட்டாபிஷேகம் ஏற்பாடு ஆன அன்று மந்தரை அந்த அரண்ம்னை உப்பரிகையில் “யாத்ருச்சிகமாக”ஏறினாள்..
விளைவு! கைகேயின் மனசு மாற்றப்பட்டு பட்டாபிஷேகம் நின்றது..

ஆரண்யகாண்டத்தில் சக்கரவர்த்தித் திருமகன்,சீதை,லக்ஷ்மணன் இம்மூவரும் பர்ணசாலையில் வீற்றிருக்கும்போது சூர்ப்பணகை அந்த இடத்துக்கு தற்செயலாக வந்தாள்.இதுவே அவள் மூக்கறுபட்டதற்கும்,கரதூஷண வதத்திற்கும்,ஸீதாவியோக விருத்தாந்தங்களுக்கான “எதேர்ச்சையான்”காரணம்.

வனவாசம் புகும் கட்டத்தில் ராமனை பரதன் வந்து சந்தித்து தனக்கு ராஜ்யம் ஆள அருகதை இல்லை எனவே அயோத்திக்கு வந்து ராஜ்ய பாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டினான்.இதற்குள் ஸ்ரீராமனுக்கு தண்டகாருண்ய ஸஞ்சாரத்திலே ஆசையும்,தேவதைகளுக்குப் பண்ணின ப்ரதிக்ஞையும்,ரிஷிகளுடைய ஆசையை பூர்த்தி செய்யும் ஆசையும் சேர்ந்து கொள்ள பரதனின் கோரிக்கையை நிராகரித்தான்.No automatic alt text available.

இப்படியிருக்க வசிஷ்ட்ரின் “எதேர்ச்சியான “ப்ரேரணையின் பேரில் ராமன் தன் பாதுகையை அளிக்க “யாத்ருச்சிகமாக”பாதுகா பட்டாபிஷேகமே நடந்தது.(ஸ்வாமி தேசிகனின் பாதுகாஸாஹஸ்ரகம்)
அனைத்தும் ஈஸ்வரனின் கட்டுப்பாட்டில்”எதேர்ச்சை”யாக நடக்கிறது.

.(உ.வே.கந்தாடை க்ருஷ்ணமாச்சர்யார் கட்டுரையில் இருந்து சுருக்கம்…பாதுகா)

Do you like this Article? Subscribe here to our Email Listing

* indicates required

Leave a Reply

%d bloggers like this: