பாட்டுக்குரிய பழையவர் மூவர்..

“பாட்டுக்குரிய பழையவர் மூவரைப் பண்டொருகான்
மாட்டுக்கருள் தருமாயன் மலிந்துவருத்துதலா
னாட்டுகிருள்செக நான்மறையந்திநடைவிளங்க
வீட்டுக்கிடைகழிக்கே வெளிக்காட்டுமம் மெய்விளக்கே.”(அதிகாரசங்கிரகம் தேசிகப்ப்ரபந்தம்)
பொய்கை,பூதம்,பேயாழ்வார் இம்மூவரும் இன்னிலவுலகில் ஆவிர்ப்பவித்தது ஐப்பசி மாதத்திய ச்ரவணம்(நேற்று),அவிட்டம்(இன்று),சதயம்(நாளை) ஆகிய மூன்று அடுத்தடுத்த தினங்களாகும்.அத்தகைய பெருமை கொண்ட இம்மாதத்தில் முதல் மூன்று ஆழ்வார்களையும் அவர்களது உபகாரங்களையும் பற்றி சுருக்கமாக ந்ருஸிம்ஹப்ரியா சம்பாதகர்,மற்றும் பாதுகாவில் ஸ்ரீஎஸ்.சுதர்சனம் அவர்களது குறிப்பிலிருந்தும் சில வரிகள்..

இவர்கள் ஸர்வேஸ்வரனால் அநுக்ரஹிக்கப்பட்ட ஜ்ஞான பக்திகளைக் குறைவற உடையவர்களாய்,கர்பவாசம் பண்ணிப் பிறவாமல் ஸ்வதந்த்ரமாய் பிறந்தது முதலாக பகவானுபவத்திலே பழுத்தவ்ர்களாய் “இன்கவி பாடும் பரம்கவிகள்”என்று நாவீறுடைய பெருமாள் ஸ்வாமி நம்மாழ்வாராலும்,”செந்தமிழ்பாடுவார்”என்று நாலுகவிப் பெருமாள் திருமங்கையாழ்வாராலும் கொண்டாடப் படுகிறார்கள்.
“மாயவனை மனத்துவை”இம்மூன்று வார்த்தைகள பொய்கையாரின் முதல் திருவந்தாதியின் இறுதியில் உதிர்ந்த முத்துக்கள்.
மாயவன் என்றால் ஆச்சர்யமான காரியங்களைச் செய்பவன் என்று பொருள்.அவன் ஸ்ரீமன் நாராயணனே ஆவான்.இவன் கருணை ஒன்றே நனமையை விளைவிக்கும் என்று முதன் முதலில் தெள்ளத் தெளிவாகக் காட்டித் தந்த பெருமை பொய்கையாழ்வாரையே சேரும்..
“முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும்

முதலாவான் மூரிநீர் வண்ணன், – முதலாய

நல்லான் அருளல்லால் நாமநீர் வையகத்து,

பல்லார் அருளும் பழுது….(முதல் தி.தி.15)

இன்று முதலாகவாவது எம்பெருமானை நினை.அவன் திருநாமங்களை ஒரு ஈடுபாடு இல்லாமல் கூட சொல்லு.மேலுக்காகவாவது அவன் பேரைச் சொல்லு.அன்பில்லாவிடினும் கபடமாக அவனிடம் நடித்தாலும் பரவாயில்லை.மலைபோல் குவிந்துள்ள நம் பாவங்கலை மன்னித்து நம்மை ஆட்கொள்ளுவான்.இப்படி நம்மை தைரியமூட்டுகின்றார்.(முதல்திருவந்தாதி-41)
“குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்

இன்று முதலாக என்னெஞ்சே, – என்றும்

புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்

திறனுரையே சிந்தித் திரு.”வேறென்ன வேண்டும் நமக்கு ஆறுதல் இதைவிட!
பகவந் நாம சங்கீர்த்தனத்தின் மேன்மையை உணர்த்துவதே பூதத்தாழ்வாரின் குறிக்கோள்.”மாதவ”என்னும் திருநாமமே சகல வேதங்களின் கடைந்தெடுத்த சாரம் என்று பறை சாற்றுகிறார்.வேதம் கற்றுக் கொள்ளவில்லை என கவலையை ஒதுக்குங்கள்.வேதத்தின் சாரம் இப்பாசுர வடிவில் சொல்லப்படுகிறது…இரண்டாம் தி.தி.–39.
”ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே,

உத்தமன்பேர் ஏத்தும் திறமறிமி னேழைகாள்,- ஓத்தனை

வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர்

சொல்லுவதே ஓத்தின் சுருக்கு….மாதவா என்று சொல்ல சாஸ்த்ர ஞானம் எதுவும் வேண்டாம்.ஆர்வம் ஒன்றிருந்தால் போதும் என்கிறார்.
பகவான் எங்கு இருக்கிறான் என்ற கேள்விக்கு விடை தருகிறார் மூன்றாவது ஆழ்வார் பேயாழ்வார்.
அந்தர்யாமியாய் “நம் மனத்துள்ளான்”(3ஆம் தி.தி.3) என்கிறார்.”கழல் தொழுதும் வா நெஞ்சே”(3ஆம் தி.தி.7)என்ற வரிகளால் அற்புதமான் கிடைத்தற்கரிய பகவான் திருவடிகளைத் தொழ தன் மனத்தை எழுப்புகிறார்.
பகவான் நம்மனதில் அந்தர்யாமியாய் வாழ்கிறான் என்பதை அறியும் பக்குவம்,மனத்தெளிவு நமக்கு எப்போது வரும்?இது சாத்தியமா?என்ற கேள்விக்கு விடை அளிக்கிறார் (3ஆம் தி.தி…52)
“முயன்று முழு நெஞ்சே”என்று பாடுகிறார்.முயற்சி ஒன்றே ஆர்வத்தையும் தன் நம்பிக்கையையும்,மகாவிஸ்வாசத்தையும் கொடுக்கும்…
முதலாழ்வார்கள் ஜன்ம ந்க்ஷத்திரத்தின்போது மாயவனை மனத்தில் வைத்து,மாதவன் பேரோதி,உள்ளத்தில் உள்ளவனை உணர்ந்து வாழ்த்துவோம்..Image may contain: 1 person, outdoor

One thought on “பாட்டுக்குரிய பழையவர் மூவர்..

Leave a Reply

%d bloggers like this: